மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!
ADDED :4067 days ago
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:௦00மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்வதற்காக, அதிகாலையிலேயே, பக்தர்கள் குவிந்தனர். காலையில் ஆரம்பித்து, இரவு வரை, ஆயிரக்கணக்கானோர் நீண்டவரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. இதுபோல, புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வீதியுலாவும் நடந்தது.