பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா!
ADDED :4219 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 1008 சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை பஞ்சவடியில், 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை 9:00 மணிக்கு, கணபதி மூலமந்திர ஹோமம், 10:00 மணிக்கு 1008 சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது. 11:00மணிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.