பஞ்சநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4053 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த அகரம் பஞ்சநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த அகரத்தில் திரிபுரசுந் தரி சமேத பஞ்சநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கெங்கையம்மன், திரவுபதி அம்மன், அய்யனார், திரிபுரசுந்தரி அம்மன் மற்றும் பஞ்சநாதீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரே சமயத்தில் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.