கடலூர் ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4053 days ago
கடலூர்: நவசக்தி அனுக்ரஹா சாட்டிலைட் டவுன்ஷிப் வளாகத்தில் உள்ள பழஞ்சோற்று ஐயனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடலூர் அடுத்த ரங்கப்ப ரெட்டிப்பாளையம் நவசக்தி அனுக்ரஹா சாட்டிலைட் டவுன்ஷிப் வளாகத்தில் அமைந்துள்ள பழஞ்சோற்று ஐயனார் என்கிற வழுதலம்பட்டு ஐயனார் கோவிலுக்கு தொழிலதிபர் மணிரத்தினம் தலைமையில் திருப்பணிகள் நடந்தது. அதனையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை முதல்கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து 7:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.