காசிவிஸ்வநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு!
ADDED :4053 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் காசிவிஸ்வநாதர் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா
நடந்தது.வேதாரண்யம், நாகை ரஸ்தாவில் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு விழா, 82 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 14ம் தேதி நடந்தது கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த மண்டலாபிஷேக ஆராதனைகள் பூர்த்தியடைந்தது. இதையடுத்து சிறப்பு ஹோம பூஜை, அபிஷேக, ஆராதனைகளை பைரவசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடத்தினர். ஹோம பூஜையில், புனிதநீர் அடங்கி கலசங்கள் வைத்து பூஜை செய்து, மூலவிக்ரகங்களுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன், சந்திரசேகர ஸ்வாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.