விநாயகர் சிலை ஊர்வலம்!
ADDED :4056 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. விநாயகர்
சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 29ம் தேதி, சங்கராபுரம் நகரில் 7 இடங்களில் விநாயகர்
சிலைகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 8 நாட்க ளாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு மேல் விநாயகர் சிலைகள் டிராக்டரில் ஏற்றப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.