ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டுதல் முகாம்
ADDED :4047 days ago
கோவை : கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டுதல் முகாம், கோவை, கரும்புக்கடை, இலாஹி நகரில் உள்ள முனவ்வரா ஹாலில் நடந்தது. அப்துல் கபூர் வரவேற்றார். கோவை, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லுாரியின் பொதுச்செயலாளர், உமர் ஃபாரூக் தலைமை வகித்தார்.கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் சையது இப்ராஹிம் ஹஜ்ஜின் சிறப்புகள் குறித்தும், அதன் மூலம் பெறக்கூடிய படிப்பினைகள் குறித்தும் தெரிவித்தார்.பாலக்காடு மஸ்ஜித்தின் பக்கீர் முஹம்மது பாகவி ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், வழிபாடுகள் குறித்து கூறினார்.கோவை, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர், முஹம்மது இஸ்மாயில் இம்தாதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.