சக்தி மாரியம்மன் கோவில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :4049 days ago
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, புதுப்பாளையம் கிராமத்தில், அப்பகுதி மக்களின் காவல் தெய்வமான பழமையான சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜை வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அம்மனுக்கு, அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அரசு வேம்பு விநாயகர் கோவிலில், 48வது நாள் மண்டலாபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. வழிபாட்டில் எருக்கு மற்றும் அருகம்புல் மாலைகளுடன் வந்த பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.