உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை சங்கீத உற்சவம் 13ல் துவக்கம்!

செம்பை சங்கீத உற்சவம் 13ல் துவக்கம்!

பாலக்காடு : செம்பை வைத்தியநாத பாகவதரின், 118-வது பிறந்த நாளையொட்டி, வரும் 13ம் தேதி சங்கீத உற்சவம் நடக்கிறது. செம்பை பார்த்தசாரதி கோயிலில் அன்று காலை 11:30 மணிக்கு நடக்கும் விழாவில், கோவை ஆயுர்வேத பார்மசி இயக்குனர் கிருஷ்ணகுமார், சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார். திருச்சூர் ஆர்.மோகன் தலைமை வகிக்கிறார். எம்.எல்.ஏ., பாலன், மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சோமசேகரன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். தொடர்ந்து திருச்சூர் சகோதரர்கள், ஸ்ரீகிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன் ஆகியோரின் இசைக்கச்சேரி நடக்கிறது.மறுநாள், 14ம் தேதி, 11:45 மணிக்கு, செம்பை வித்யா பீடத்தின் ஆண்டு மாநாட்டை, மாவட்ட கலெக்டர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார். மாவட்ட நீதிபதி இந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தாமோதரன் நம்பூதிரி, செம்பை நினைவுரையாற்றுகிறார். தொடர்ந்து ராஜகுமாரனுண்ணியின் சங்கீத கச்சேரி நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் சங்கீத உற்சவத்தில், 200க்கும் மேற்பட்ட இளம் பாடகர்களின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !