உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) அமோக லாபம்!

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) அமோக லாபம்!

நன்றியுணர்வுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே!

கிரகங்களில் சுக்கிரன் செப். 26ல் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் சூரியன்,புதன், சனி ஆகிய மூவராலும் நன்மை கிடைக்கும். செயலில் குறுக்கிட்ட தடைகள் அனைத்தும் விலகும். எதிலும் திறமையுடன் செயல்பட்டு வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன்-மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். பெண்களால் நன்மை அதிகம் கிடைக்கும். உறவினரால் நன்மை ஏற்படுவதோடு, சில சமயம் பிரச்னையும் உருவாகும்.
செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னை வரலாம். பொருள் விரயமும் உருவாகும்.

தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.  புதிய முயற்சியில் ஆதாயமான பலன் காண்பர். தொழிலில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். பணியாளர்கள் வேலையில் மேன்மை காண்பர். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். பணியில் பதவி உயர்வும் காத்திருக்கிறது. விரும்பிய இட, பணி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ் பாராட்டு வந்து சேரும். செப். 26க்கு பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படலாம்.  

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.கேதுவால் வேண்டாத பழக்கத்திற்கு ஆளாகலாம் கவனம்.  

மாணவர்கள் கல்வியில் வெகுவாக முன்னேற்றம் காணலாம். பின்தங்கிய நிலை மாறும்.

விவசாயிகள் கால்நடை மூலம் சிறப்பான பலன் பெறுவர்.புதிய  சொத்து வாங்க நினைப்பவர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.வழக்கு விவகாரத்தில் அனுகூலமான போக்கு இருக்காது.

பெண்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். ஆடம்பர பொருள் வாங்கலாம்.

நல்ல நாள்: செப்  17, 18, 21, 22, 25,  27,  அக். 1, 2, 3, 4, 5

கவன நாள்: செப். 19,20 அக். 16,17 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,2,4         நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். விநாயகர், முருகன் கோயில்களில் தீபமேற்றுங்கள். செப். 26க்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !