உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக யோகம்!

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக யோகம்!

அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கும் மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் தற்போது உள்ள 8-ம் இடம் சிறப்பானது. செப். 26க்குப் பிறகு செல்லும் 9-ம் இடமும் சிறப்பானதே. செவ்வாய், கேது, குரு ஆகியோரும் நன்மை தர காத்திருக்கின்றனர். தெய்வ அனுகூலம் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் எந்த தடையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். சூரியன், புதனால் வீண் விவாதத்தில் ஈடுபட வாய்ப்புண்டு. சிலர் பொல்லாப்பையும் சந்திக்க நேரிடும். அதனால், விவாதத்தை தவிர்த்து, விட்டுக்  கொடுப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வசதி வாய்ப்பு
பெருகும்.  

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வசமாக எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனை மேலோங்கும். பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தடைபட்ட பதவிஉயர்வு வந்து சேரும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புகழ் பாராட்டுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த நன்மை பெறலாம்.

மாணவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் உயர்வுக்கு வழிவகுக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், கேழ்வரகு போன்ற பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். கிழங்கு வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில்
சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் அக்கம் பக்கத்தினரின் ஆதரவைப் பெறுவர். கணவரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன்  சுற்றுலா சென்று மகிழ்வர். பிள்ளைகளால் நன்மை உண்டு.

நல்ல நாள்: செப். 17, 18, 19, 20, 26, 24, 28, 29, 30,  

அக்.  3, 4, 7, 8, 14, 15, 16, 17

கவன நாள்: செப். 21,22,23 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,7            நிறம்: மஞ்சள் , சிவப்பு

வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.   சனியன்று சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். மாரியம்மனை வலம் வந்து வழிபட்டு, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !