வேணுகோபால் சுவாமி கோவிலில் திருமஞ்சனம்!
ADDED :4266 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ருக்குமணி சத்யபாபா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவில் மூன்றாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. அன்று மாலை ஏகாந்த சேவை அலங்காரத்திலும், 12ம் தேதி திருப்பாவாடை மற்றும் ராஜகோபாலன் அலங்காரமும், 13ம் தேதி ராஜா ராணி அலங்காரத்திலும் வேணுகோபால சுவாமி அருள்பாலித்தார். நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இரவு, வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (15ம் தேதி) ஊஞ்சல் உற்சவமும், நாளை உறியடி மற்றும் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.