திண்டிவனம் ஆன்மிக சங்கத்தில் இறை தியானம்
ADDED :4044 days ago
திண்டிவனம் பி.கே., மஹாலில் சுப்ரபஞ்ச அமைதி மற்றும் ஆன்மிக சங்க இறை தியான பயிற்சி முகாம் நடந்தது. சுப்ரபஞ்ச அமைதி மற்றும் ஆன்மிக சங்க நிறுவனர் ரமேஷ் தலைமை தாங்கி, இறையாசி வழங்கினார். பாலாஜி மருத்துவமனை மேலாண் இயக்குநர் ஜெயா அரிதாஸ், பி.ஆர்.எஸ்., துணிக்கடை சதீஷ், கிஷோர்குமார், கணேஷ், ஜோதி தினகரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், குடும்பநலன் வேண்டியும் தியான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.