கவிக்குயில் நகரில் சுவாமி வீதியுலா!
ADDED :4076 days ago
புதுச்சேரி: கவிக்குயில் நகரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சுவாமி வீதி உலா நடந்தது. கவிக்குயில் நகர் ஸ்ரீரங்க பரிமள பாண்டுரங்கன் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், வேங்கடாத்திரி பஜனை கூடத்தில் 15ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. வேங்டாத்திரி பஜனை குழுவினரின் பஜனை, உறியடி உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து, சுவாமி வீதி உலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.