உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

திண்டிவனம்: திண்டிவனம் காமாட்சியம்மன் கோவில் புனரமைப்பு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 13ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று முன் தினம் காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து யாகசாலை புனித கலசங்களுடன் கோவிலை வலம் வந்தனர். 7.15 மணிக்கு விநாயகர், மூலவர் காமாட்சியம்மன் மற்றும் விஸ்வபிரம்மா, காயத்ரிதேவி, அன்னப் பூரணி, தட்சணாமூர்த்தி நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடந்தது. திருவண்ணாமலை சிவ சிவராஜ் சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். அகில பாரதீய விஸ்வகர்ம ஜெகத்குரு சிவ சண்முக ஞானாச்சார்ய குரு சுவாமிகள், அ.தி.மு.க., வை சேர்ந்த குப்புசாமி, வேலாயுதம், ராமச்சந்திரன், தமிழரசன், பச்சையப்பன், சுரேஷ், சங்கர் கணேஷ், . ராமச்சந்திரன், முருகன் என்கிற பிரபு, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, திண்டிவனம் காமாட்சியம்மன் கோவில் பாதுகாப்பு கமிட்டி, திருப்பணிக்குழு, மகா மண்டப திருப்பணிக்குழு மற்றும் விஸ்வகர்ம ஐந்தொழில் அமைப்பாளர்கள் அமைப்பினர் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !