உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்

சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சிங்கனூர் லக்ஷ்மி நாராயண சீனிவாச பெருமாள் கோவிலில் 4 ம் ஆண்டு புரட்டாசி மகோற்சவம் வரும் 20 ம் தேதி துவங்குகிறது. முதல் சனிக்கிழமை திருவேங்கடமுடையான் திருக்கோலம், 27ம் தேதி சந்தனகாப்பு, அக்.,மாதம் 4 ம் தேதி வெண்ணெய்க்காப்பு, 11ம் தேதி புஷ்ப அலங்காரத்திலும் பெருமாள் அருள்பாலித்து சேவை சாதிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !