உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்!

திருமலையில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்!

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், இன்று மாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நவராத்திரியின் போது, வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம், இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நேற்று மாலை, புற்றுமண் எடுத்து, முளைவிடுதல் நிகழ்ச்சி நடந்தது.உற்சவம் நடக்கும், ஒன்பது நாட்களும், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.தரிசனங்கள் ரத்து: திருமலையில், ஒன்பது நாட்களுக்கு, அனைத்து ஆர்ஜித சேவைகளையும், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.மூத்த குடிமக்கள் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் தரிசனம், கைக்குழந்தையுடன் பெற்றோர் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமலை வரும் பக்தர்கள், இணையதள முன்பதிவு டிக்கெட், பாதயாத்திரை தரிசனம் மற்றும் தர்ம தரிசனத்தில் மட்டுமே, ஏழுமலையானை தரிசிக்க முடியும்.பிரம்மோற்சவ நாட்களில், வாடகை அறை முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை கடிதங்களுக்கு, வாடகை அறை வழங்கப்படாது.வாடகை அறை நன்கொடையாளர்களுக்கு, இரண்டு நாள் தங்குவதற்கு மட்டுமே, அறை வழங்கப்படும். திருமலை மடங்களில் உள்ள அறைகளில், 50 சதவீதம், தேவஸ்தானத்தின் கட்டுபாட்டிற்குள் இருக்கும்.கருட சேவை: திருமலையில், வரும், 30ம் தேதி கருட சேவை நடக்கிறது. அதற்காக, 29ம் தேதி நள்ளிரவு முதல், அக்., முதல் தேதி, பகல் 12:00 மணி வரை, இரு சக்கர வாகனங்களுக்கு, மலைபாதையில் செல்ல, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பிரம்மோற்சவத்தை ஒட்டி, 400 உயர் அதிகாரிகளுடன், 2,600 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கருட சேவை அன்று, கூடுதலாக 3,000 போலீசார், வெளி மாநிலங்களில் இருந்து வர உள்ளனர்.பக்தர்கள் அவசர தேவைக்கு, 18004254141 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பிரம்மோற்சவத்தையொட்டி, திருமலை முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !