ஷீரடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா
ADDED :4030 days ago
பெரம்பலூர்: பெரம்பலூர் தீரன்நகர் எதிரே உள்ள ஷீரடி சய்பாபா கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.நவராத்திரி விழா, 3ம் தேதி வரை நடக்கிறது. ஷீரடி சாய்பாபா கோவிலில், நவராத்தி கொலு வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. நவராத்திரி விழாவில், நாள்தோறும், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கை, சுபத்ரை என அம்பிகை பாவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. விழாவையொட்டி, மாலை, 6 மணிக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை தலைவர் ரெங்கராஜன், செயலாளர் ஐயப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.