ராமேஸ்வரம் தீர்த்த குளம் உழவார பணி!
ADDED :4096 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராடி, தரிசனம் செய்வது ஐதீகம். இங்குள்ள தீர்த்தங்களில் 21 கிணறு வடிவிலும், 6 வது சேதுமாதவர் தீர்த்தம் மட்டும் குளம் வடிவில் உள்ளது. 2001 ல் நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேதுமாதவர் தீர்த்த குளம் தூர் வாரி சுத்தம் செய்யப்பட்டது. இதன் பின், 2015 ல் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்காக, திருப்பணிகள் நடக்கிறது. இதில் 13 ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ள சேதுமாதவர் தீர்த்த குளத்தை, நேற்று கோயில் ஊழியர்கள் கழிவு மணலை அகற்றி சுத்தம் செய்து, உலவார பணியில் ஈடுபட்டனர்.