தியாகதுருகத்தில் நவராத்திரி விழா!
ADDED :4030 days ago
தியாகதுருகம்: தியாகதுருகம் முருகன் கோவிலில் நவராத்திரி கொலு வைத்து, பெண்கள் வழிபாடு நடத்தினர். தியாகதுருகம் முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைத்துள்ளனர். பல்வேறு சுவாமி பொம்மைகளை கொண்டு, கொலு படிகளை அலங்கரித்துள்ளனர். நடுவில் அம்மன் சிலை வைத்து தினமும் ஒரு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு சுவாமி வேடமிட்டு அமரவைத்து பக்தி பாடல்களை பாடினர். தொடர்ந்து அம்மன் துதி, அர்ச்சனைகள் செய்து மகாதீபராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள், குழந்தைகள் கொலுவில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இவ்விழா விஜயதசமி அன்று நிறைவடைகிறது.