உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா!

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா!

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன்  கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள்  நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை 7 மணியளவில் திருமஞ்சனம், 17 வகையான அபி ஷேகங்கள், சகஸ்ரநாம பூஜைகள் செய்து மகாதீபாரதனை நடந்தது. இரவு 7 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து நவராத்திரி  குழுவினரால் கொலு பொம்மை அமைத்து பஜனை மற்றும் நவகன்னிகள் பூஜையும் நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம்  அணிவிக்கப்பட்டது. அலங்கார தீபங்கள் வைத்து வழிபாடு நடத்தினர்.  திரளான ஆர்ய வைசிய சமூக பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !