காரமடையில் நவராத்திரி நிறைவு விழா!
ADDED :4356 days ago
மேட்டுப்பாளையம்: காரமடையில் நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு, அரங்கநாதர் சுவாமியும், லோகநாயகி சமேதர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியின் திருவீதி உலா நடந்தது. காரமடையில் அரங்கநாதர் கோவிலிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலும் உள்ளது. இரு கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக நடந்தது. நிறைவு விழா அன்று, இரவு 11.00 மணிக்கு அரங்கநாதர் பெருமாள் வெள்ளைக்குதிரை வாகனத்திலும், லோகநாயகி சமேதர் நஞ்சுண்டேஸ்வர சுவாமி சப்பரத்திலும், திருவீதி உலா ஒன்றாக நடந்தது. பரிவேட்டை மைதானத்தில் வன்னிமரத்துக்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.