உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

உத்தமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

மண்ணச்சநல்லூர்,: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுபட வேண்டி, அ.தி.மு.க.வினர் திருச்சி, உத்தமர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். பிக்சாண்டர்கோவில் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருமஞ்சனமும், புருஷோத்தம பெருமாள் சன்னதி, சிவன் சன்னதி, பிரம்மா சன்னதிகளில் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், திருச்சி புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் மூக்கன், ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி, ஆவின் பால்வள கூட்டுறவு சங்க இயக்குநர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !