கயா சென்றாலும் வருஷதிதி கொடுங்கள்!
ADDED :4129 days ago
காசி யாத்திரை செல்பவர்கள், கயா என்ற தலத்தில் பிதுர்க்கடன் செய்து விட்டபின், ஆண்டுதோறும் செய்யும் வருஷ திதி கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இந்ததவறான நம்பிக்கை காசி, கயாவில் வசிப்பவர்களுக்கு கூடகிடையாது. காசி,கயாவில் செய்யும் பிதுர்க்கடன் மிகவும்புனிதமானது தான். அதற்காக ஆண்டுதோறும் செய்யும் வருஷ திதி கொடுக்காமல் இருப்பது கூடாது. ப்ரத்யாப்திக சிராத்தம் எனப்படும் இதைச் செய்யத் தவறினால், நாம் செய்யும் தர்ம செயல், தெய்வ வழிபாடு கூட பலனின்றிப் போகும். முன்னோர் ஆசியோடு செய்யும் பூஜை, ஹோமம் போன்றவற்றிற்கே முழுபலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.