உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் லட்சுமி சுதர்சன ஹோமம்!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் லட்சுமி சுதர்சன ஹோமம்!

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பனையாந்தூர் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஜெ., விடுதலையாக வேண்டி அ.தி.மு.க., வினர்  லட்சுமி சுதர்சன ஹோமம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு, வடபாதி கூட்டுறவு வங்கித் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் தங்கராஜ்,  ஒன்றிய கவுன்சிலர் வசந்தா ஆறுமுகம், கிளைச் செயலர் மருதமுத்து, இளவரன், பாலகிருஷ்ணன், பழனிமுத்து, திருநாவுக்கரசு, சுரேஷ், பூமாலை,  ஏசல்லாபாய், பழனியம்மாள், வளர்மதி பங்கேற்றனர். சிவஷர்மா குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் காலை 9:00 மணிக்கு கணபதி ÷ ஹாமம் மற்றும் லட்சுமி சுதர்சன் ஹோமத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து 108 சுமங்கலி பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு  நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு, ஜெ., விடுதலையாக வேண்டி சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு  ஆராதனை செய்யப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !