புனித தெரசம்மாள் கோவிலில் அக்., 12ல் தேர்த்திருவிழா
கரூர்: கரூர் புனித தெரசம்மாள் கோவிலில் வரும், 12ம் தேதி தேர்பவனி கோலாகலமாக நடக்கிறது. அக்டோபர், 1ம் தேதி புனித குழந்தை தெரசம்மாள் திருநாள் நடந்தது. 3ம் தேதி திருவழிபாடு நடந்தது. அன்று மாலை, சிறப்பு சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, தினமும் சிறப்பு சொற்பொழிவு, தியானம், திருப்பலி நடந்து வந்தது. நேற்று , "கொடுக்கும் குடும்பமாய் பிறர் நலம் காப்போம் என்ற தலைப்பில் குன்னமலை பங்குத்தந்தை பிரகாஷ்ராஜ் பேசினார். நம்பிக்கையின் குடும்பமாய் சவால்களை மேற்கொள்வோம் என்ற தலைப்பில் மதுரை மாதா மையம் இயக்குனர் செலஸ்டின் பேசுகிறார். வரும், 12ம் தேதி காலை திருவிழா திருப்பலி மற்றும் அருட்சாதனங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7 மணிக்கு புனித அன்னையின் உருவம் தாங்கிய அலங்கார திருத்தேர் பவனி நடக்கிறது. இரவு, 8.30 மணிக்கு நன்றி, ஆராதனை, வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை, 6 மணிக்கு நன்றித் திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.