திருப்பரங்குன்றம் வேலுக்கு நாளை அபிஷேகம் இல்லை!
ADDED :4341 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு நாளை (அக்., 17) அபிஷேகம் நடத்தப்படமாட்டாது.மலை அடிவாரத்தில் குடைந்து மூலவர் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் அனைத்தும் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கே நடக்கும். நாளை மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவை முன்னிட்டு, மலைமேலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு பல்லக்கில் வேல் கொண்டு செல்லப்படும். அங்குள்ள சுனை தீர்த்தத்தில் கிராமத்தினர் சார்பில் பல்வகை அபிஷேகங்கள் முடிந்து இரவு பூப்பல்லக்கில் வேல் புறப்பாடாகி வீதி உலா முடிந்து மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்படும். அதனால் நாளை ஒரு நாள் மட்டும் வேலுக்கு அபிஷேகம் நடக்காது.