திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா : 8 லட்சம் பக்தர்கள் வருகை!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் அக்., 24 ல் கந்தசஷ்டி விழா துவங்குகிறது. அக்., 29 ல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள், என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடக்கும். இவ் விழா அக்., 24 ல் காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. எழாம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தீபாராதனையுடன் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். முதல் தலை படுதல் நகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். எட்டாம் நாளில், காலை 5 மணிக்கு தேவசேனாம்பாள் தபசுக்காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6.30 க்கு சுவாமி எழுந்தருளல்,அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, தோள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி. நகர் வலம் வந்து கோயில் சேர்கின்றனர். இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. ஒன்பதாம் நாள் சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் நகர் வலம் வருதல்.
அடுத்த மூன்று நாட்களுக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நவ., 4ல்திருவிழா நிறைவு பெறுகிறது.அதிகாரிகள்:
ஆலோசனை : கூட்டத்தில் கலெக்டர் ரவிக்குமார், துரை எஸ்.பி.,கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகர். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு ஏற்பாடு: சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள், என்பதால், பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளான குடி நீர், சுகாதாரம், கழிப்பறை வசதிகள் செய்யப்படவுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார்கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர்.