பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்!
ADDED :4166 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஐப்பசி அமாவாசையைö யாட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. தீபாராதனை நடந்தன. உளுந்தூர்பேட்டை தி.மு.க.,முன்னாள் நகர செயலாளர் செல்லையா அன்னதானம் வழங்கினார். பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.