உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நேற்று தீபாவளி அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாவளி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு சுப்ரபாரதம், 7:30 மணிக்கு தோமாலை சேவை,  மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்தியபடி பூஜையும், இரவு 9:00 அர்த்த ஜாம பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !