உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்!

ஐப்பசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்!

ராமேஸ்வரம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தீபாவளி மறுநாளான நேற்று ஐப்பசி அமாவாசையையொட்டி வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்த கடலில் நீராடினர். பின், நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினர். சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !