பெருமாள் கோவிலில் கேதாரகவுரி நோன்பு!
ADDED :4169 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து கேதாரகவுரி நோன்பு எடுத்துச் சென்றனர். சொர்க்க வாசல் மண்டபத்தில் முரளிதர ஐயர் சுவாமி தலைமையில் அம்பாள் ஆவாகனம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பூஜைகள் செய்து கேதாரகவுரி நோன்பை எடுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மூலவர் திருவிக்ரமன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் நோன்பு எடுத்துச்சென்றனர்.