உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கந்தசஷ்டி விழா

திருமலைக்கேணியில் கந்தசஷ்டி விழா

சாணார்பட்டி: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமிக் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்று புகழ்மிக்க சுப்பிரமணிய சுவாமிக்கோயிலில் ஆண் டுதோறும் சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடக்கிறது. நேற்று காலை 10.30 மணிக்கு கணபதி பூஜையுடன் கோயிலின் கொடிக்கம்பத்தில் கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தர் கள் சஷ்டி விரதத்திற்காக காப்புக்கட்டினர்.இதில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், செந்தமிழால் லட்சார்ச்சணைபோற்றியும், சோடாச மகா தீபாரதனை, ராஜ தர்பார் அலங்காரமும், கந்தபுர ாண விரிவுரை,சைவப்பேருரைகள், திருமுறைப்பாராயணம், அர்த்த சாம பூஜைகள் நடந்தன.விழாவில் பரம்பரை அறங்காவலர் அழகு லிங்கம், அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்முருகன், செங்குறிச்சி ஜமீன்தார் சுந்தரவடிவேல்ராஜா, ஊராட் சித் தலைவர் மணி, ஒன்றியத்தலைவர் இன்பஜோதி, மாவட்டக்கவுன்சிலர் ஜெயலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !