உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரகத மயில் மீனாட்சி!

மரகத மயில் மீனாட்சி!

மதுரையில் மலையத்துவஜபாண்டியன், காஞ்சனமாலை தம்பதிக்கு பார்வதியே குழந்தையாக அவதரித்தாள். மீனாட்சியான அவள் பருவவயது அடைந்ததும், பட்டம் சூட்டப்பட்டு இளவரசியானாள். மீன்கொடி பறக்க திக்விஜயம் (சர்வ உலகங்களுக்கும் செல்லுதல்) செய்து, அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்றாள். கைலாயம் சென்று சிவனை போருக்கு அழைத்தாள். ஆனால், அவரது கம்பீரத்தைக் கண்டு நாணம் கொண்டாள். அவரையே திருமணம் செய்ய முடிவாயிற்று. இதன்பிறகு, மீனாட்சி திருமணம் விமரிசையாக நடந்தது. சுந்தரேஸ்வரர் என்னும் பெயரில் வந்த சிவன், அவளைத் துணைவியாக ஏற்றார். இவள் மரகதத்தைப் போல பச்சை நிறம்கொண்டவள் என்பதால் மரகதவல்லி என்றும் அழைக்கப்படுகிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !