எங்க மாமா!
தமிழிசை சங்கம் ஒன்றில், வாரியாரின் பக்தி சொற்பொழிவுக்கு நடந்தது. யார் நமது உறவினர்? என்பது பற்றி அவர் பேசத் தொடங்கினார். அதில் கடவுள் ஒருவரே நமக்கு உற்ற உறவு என்பதை பக்தி இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியதோடு இசையுடன் பாடவும் செய்தார். அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதி பாடலான, எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ என்று பாடி முருகப்பெருமானே நமக்கு தாயாகவும், தந்தையாகவும் இருப்பதை விளக்கினார். முருகனை வணங்கி அவன் திருநீற்றினை அணிந்து கொண்டால் வந்த வினையும் வருகின்ற வல்வினையும் பொடிப்பொடியாகிவிடும் என்றுகுறிப்பிட்டார். அடுத்ததாக,அப்பன் நீஅம்மை நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். இதைக் கேட்டதும் ஒருவருக்கு சந்தேகம் எழுந்தது. ஐயா! கடவுளை தாய், தந்தையாக வணங்குவது சரி. ஆனால், அவர் நமக்கு மாமனாக எப்படி ஆக முடியும்? என்று கேட்டார்.அதற்கு வாரியார்,மாமன் என்பவன் யார்? தான் பெற்ற பெண், பொன், பொருள் அனைத்தையும் வேறொருவனுக்குக் கொடுத்து அதைக் கண்டு மகிழ்பவன் தானே. அதுபோல, இந்த பூமியைப் படைத்து அதிலுள்ள கடல், மலை, வனம் என எல்லா வளங்களையும் நாம் அனுபவிப்பதற்காக வழங்கியவர் கடவுள் தானே. பெண் கொடுத்தால் மட்டும் தான் மாமனா? நாம் வாழ்வதற்காக இந்த மண்ணைக் கொடுத்தகடவுளும் மாமன் தான்! என்று விளக்கம் அளித்தார்.அவரது விளக்கம் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.