உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெரீனாவில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடிய ’சாத்’ பூஜை!

மெரீனாவில் வடமாநிலத்தவர்கள் கொண்டாடிய ’சாத்’ பூஜை!

மெரீனா: ’சாத்’ பூஜையின் மூன்றாம் நாளான, நேற்று மெரீனாவில், வடமாநிலத்தவர்கள் சூரியபகவானுக்கு நன்றி தெரிவித்து வணங்கினர். தமிழ் கடவுள் முருகனை வடமாநிலத்தவர் ’கார்த்திகேயன்’ என்ற பெயரில் அழைப்பதோடு, இந்த சஷ்டி விரதத்தை ’சாத்’ என்ற பெயரில் மிகவும் பிரபலமான ஒரு விரதமாக கடைப்பிடிக்கின்றனர். விரதம் இருப்பது மூலம் வாழ்க்கையில் மிகச்சிறந்த புண்ணியங்களை பெற முடியும் என, வடமாநில மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, பீகார் மாநிலத்தில், சாத் விரதம் அதிகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று மெரீனாவில், சூரிய பகவானுக்கு, ஒரு புதிய முறத்தில் கொப்பரை தேங்காய், கரும்பு, வெள்ளை முள்ளங்கி, இனிப்பு, மலர், முளைவிட்ட தானியம் எடுத்துக்கொண்டு, தண்ணீரில் நின்றபடியே முறத்தை இரு கைகளில் ஏந்தி சூரிய பகவானை வணங்கி, முறத்தில் உள்ள பொருட்களை, சூரியனுக்கு அப்படியே தண்ணீரில் அர்ப்பணித்தனர். பின், அமைதியாக கரையில் அமர்ந்து சூரிய வழிபாடு செய்தனர். இரவு முழுவதும் நீர்நிலைகளின் கரைகளில் அவர்கள் தங்கினர். முறத்தில் வைக்கப்பட்ட எஞ்சிய பொருட்களை பிரசாதமாக சாப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !