திருப்பரங்குன்றத்து முருகனுக்கு சாந்தாபிஷேகம்!
ADDED :4325 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் முடிந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர்.
இரவு 7 மணிக்கு சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பஞ்சகவ்யம், 108 லிட்டம் பால், இளநீர் உட்பட பல்வகை திரவிய அபிஷேகுங்கள் முடிந்து சுவாமிக்கு தங்ககுடம், தெய்வனைக்கு வெள்ளி குடங்களில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு சாத்தப்படியாகி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.