சோடசலிங்க ஸ்வாமிகளுக்கு பவுர்ணமி அன்னாபிஷேகம்
ADDED :3985 days ago
கும்பகோணம்: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, கும்பகோணம் மகாமக குளக்கரையில் எழுந்தருளியுள்ள, 16 சோடசலிங்க ஸ்வாமிகளுக்கு, நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. கும்பகோணம் மகாமக குளத்தில், 20 தீர்த்த கிணறுகள் உள்ளன. மகாமக குளத்தை சுற்றிலும்,16 வகையான சிவலிங்கங்கள் எழுந்தருளியுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து, சோடஷ மகாலிங்க ஸ்வாமிகள், என அழைக்கின்றனர். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை எண்ணெய், அரிசிபொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பலவித பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தயிருடன் கலந்த அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.