சாய்ந்த ஸ்தல விருட்சம்: உயிர் கொடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு!
ADDED :3983 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மழையில் சாய்ந்த ஸ்தல விருட்ச மரமான வன்னிமரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர். இக்கோயில் வடக்கு கிழக்கு பகுதியில் ஸ்தல விருட்ச மரமான வன்னிமரம் உள்ளது. நுõறு வயதை கடந்த இம்மரம் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழையில் சாய்ந்தது. பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர். சாய்ந்த மரத்தை நிமிர்த்தி உயிர் கொடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர். கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) அறிவழகன் கூறுகையில்,“ சாய்ந்த வன்னிமரத்தை நிமிர்த்தி வைப்பதற்காக வனத்துறையிடம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. உபயதாரர் உதவியுடன் விரைவில் மரம் நிமிர்த்தப்பட்டு உயிர் கொடுக்கப்படும்,” என்றார்.