உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாதங்குப்பத்தில் கும்பாபிஷேக விழா!

தாதங்குப்பத்தில் கும்பாபிஷேக விழா!

அவலூர்பேட்டை: தாதங்குப்பத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் நொச்சலூர் ஊராட்சியை  சேர்ந்த தாதங்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம்  மாலை 6 மணிக்கு மங்கள இசை, கணபதி , லட்சுமி, நவகிரக பூஜை, அங்குரார்ப்பணம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு 2ம் கால யாக  சாலை பூஜையும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான கிராம  மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !