ராம கீதை!
ADDED :4123 days ago
மனதைக் கட்டுப்படுத்துவதாலும், வேதங்களில் கூறப்பட்டவைகளைச் செய்வதாலும், மனத்தில் நடுநிலை உண்டாவதாலும், எல்லாம் தெய்வத்தின் வடிவங்கள் என நினைப்பதாலும், பந்தங்களை, பற்றுக்களைநீக்குவதாலும், கோபத்தை விடுவதாலும், இன்பம், துன்பம் என்ற இரண்டையும் கடந்து நின்று, மனதை ஒருநிலைப்படுத்துவதாலும். மனதின் மாசுகள் நீங்கி, தெய்வத்தின் நிலையை மனிதன் அடைகிறான். ஞானம் பெற்றவர்களுக்கு மனமே தெய்வமாகிறது. தெய்வமே எங்கும் நிறைந்து, எக்காலத்திலும் எல்லாமுமாய், அழிவற்றதாய், எப்பொழுதும் நிலைபெற்றதாய் காணப்படுகிறது. மனமே எல்லாவற்றுக்கும் எல்லாச் செயல்களுக்கும் மூலகாரணம். எதை விரும்புகிறதோ, அந்த உருவத்தை மனம் எடுத்துக் கொள்கிறது. ஏன்... இந்த உலகமே கூட மனதின் கற்பனையால் உருவானது தான்!