சபரிமலைக்கு மோடி வருவாரா?
ADDED :3987 days ago
பெங்களூரு: சபரிமலையில், மண்டல பூஜை துவங்கியுள்ளது. கர்நாடகாவிலிருந்து பக்தர்கள், குழுக்களாக சபரிமலை சென்றுள்ளனர். அய்யப்ப சேவை மையம், கர்நாடகா பக்தர்கள் நலனுக்காக, வழி நெடுகிலும், 22 சேவை மையங்களை திறக்க உள்ளது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, சபரிமலைக்கு கோவிலுக்கு வரப் போகிறார் என்ற செய்தி பரவியுள்ளது. இதனால், கர்நாடகாவிலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை, அதிகமாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, மாலை அணிந்து இருமுடி எடுத்து வருவாரா அல்லது சாதாரண உடையில் வருவாரா, என்று, பரபரப்பாக பேசப்படுகிறது.