பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் 108 திருவிளக்கு,சுமங்கலி பூஜை!
பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், தர்மசாஸ்தா சேவா சங்கம் சார்பில், 6 வதுஆண்டு 108 சுமங்கலி, திருவிளக்கு பூஜை நடந்தது. இக்கோயிலில் கார்த்திகை முதல் தேதியான நேற்றுகாலை முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்க மாலை அணிந்தனர். 7:30 மணிக்கு கணபதி ஹோமம், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிற்பகல் 3:00 மணி முதல் கன்னியா பூஜை, 108 சுமங்கலி பூஜையும், 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டன. ஐந்து முனை ரோடு, எமனேஸ்வரம் ஐயப்பன் கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து, கார்த்திகை விரதம் துவங்கினர்.
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், உலக நன்மைக்கான பூஜைகள் நடந்தன. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். ஏற்பாடுகளை குருசாமி மோகன் மற்றும் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விநாயகர் சன்னதி முன், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, சுவாமி, பர்வத வர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். தங்கச்சிமடம், பாம்பனில் 10 ஆயிரத்திற்கு மேலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.