உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை வழிபாடு கட்டணம்: நெய்யபிஷேகம் ரூ.10..படிபூஜைக்கு ரூ.40 ஆயிரம்!

சபரிமலை வழிபாடு கட்டணம்: நெய்யபிஷேகம் ரூ.10..படிபூஜைக்கு ரூ.40 ஆயிரம்!

சபரிமலை: சபரிமலையில் வழிபாடு கட்டண விபரங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது. இதில் குறைந்த கட்டணமாக நெய்யபிஷேகம் ரூ.10, அதிக கட்டணமாக படிபூஜைக்கு ரூ.40 ஆயிரம் உள்ளது.

கட்டண விபரம் வருமாறு: நெய்யபிஷேகம் தேங்காய் ஒன்றுக்கு ரூ.10, சகஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டோத்தரா அர்ச்சனை ரூ.20, பஞ்சாமிர்த அபிஷேகம் ரூ.20, கணபதிஹோமம் ரூ.200, துலாபாரம் ரூ.250, முழுக்காப்பு ரூ.500, உஷபூஜை ரூ.501, பகவதிசேவை ரூ.1000, அஷ்டாபிஷேகம் (பொருட்கள் தவிர்த்து ) ரூ.2000, உஷபூஜை ரூ. 2001, நித்யபூஜை ரூ.2501, களபாபிஷேகம் (பொருட்கள் பக்தர்கள் கொண்டுவரவேண்டும் ) ரூ.3000, அஷ்டாபிஷேகம் (பொருட்களுடன் சேர்த்து ) ரூ.3500. லட்சார்ச்சனை ரூ.4000, தங்க அங்கி சார்த்து ரூ.7500, புஷ்பாபிஷேகம் ரூ.8500, உற்சவபலி ரூ.10,000, சகஸ்ரகலசம் ரூ.25000, உதயாஸ்தமனபூஜை ரூ.25000, படிபூஜை ரூ.40000. பிரசாத கட்டணம்: வெள்ளைச்சோறு ரூ.10, விபூதி பிரசாதம் ரூ.15, சர்க்கரை பாயசம் ரூ.15, அப்பம் ரூ.25, பஞ்சாமிர்தம் ரூ.50, அபிஷேக நெய் 100 மில்லி ரூ.50, அரவணை ஒரு டின் ரூ.60. இந்த ஆண்டு முதல் கணபதிஹோமம், உஷபூஜை, நித்யபூஜை போன்ற முக்கிய பூஜைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அப்பம், அவரணை பிரசாதத்துக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !