உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கேற்றும் பலன்!

விளக்கேற்றும் பலன்!

லட்சுமி பலவிதமான பொருள்களில் வாசம் செய்தாலும் விளக்கொளி தீபத்தில் அவள் தீபலட்சுமியாக காட்சி தருகிறாள். தீபமேற்றும் நேரம் என்றாலே மாலைப்பொழுது தான் என எண்ணுகிறோம். அதிகாலை வேளையில் ஏற்றும் தீபமும் சிறந்த பலன் தருவதாகும். பிரம்மமுகூர்த்தம் என்னும் அதிகாலைப் பொழுதில் துயில் எழுந்து நீராடினால் உள்ளமும் உடலும் துõய்மை பெறும். தீபம் ஏற்றுவதற்கு நெய் பயன்படுத்தினால் ஞானம் சித்திக்கும். இலுப் பெண்ணெய் கொண்டு தீபம்ஏற்றிட உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆமணக்கு எண்ணெயால் ஏற்றிடும் தீபம் சவுபாக்கியத்தை நல்கும். நல்லெண்ணெய் தீபம் எமபயம் போக்கவல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !