பெண்களே உங்களுக்கு ஒரு செய்தி!
இன்று பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்தேவைப்படுகிறது. ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் கந்தசஷ்டி கவசம் உள்ளது. இது தேவராய சுவாமியால் பாடப்பட்டது. இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.கவசத்தின் முதல் பாடலில் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்; நிஷ்டையும் கைகூடும் என்கிறார் அவர். அதாவது படிப்போருக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும். எண்ணிய எண்ணம் ஈடேறும். காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்குநவக்கிரகங்களால் நன்மை உண்டாகும். மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும். தினமும் இதைப்படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.பெண்களே! சஷ்டி கவசத்தை விடுமுறை நாட்களிலாவது நீங்களாகப் படித்து விடுங்கள். மற்ற சமயங்களில் முழுமையாக கவனமாகக் கேளுங்கள். கந்தனின் வேல் முன் வந்துகாக்கும்.