உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜனவரியில் பிரதமர் மோடி சபரிமலை வருகை!

ஜனவரியில் பிரதமர் மோடி சபரிமலை வருகை!

சபரிமலை: வருகிற ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி சபரிமலை வர வாய்ப்பு உள்ளதாக’ திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர் கூறினார். சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி மாதம் சபரிமலை வர வாய்ப்பு உள்ளது. தேசிய  அத்லடிக் போட்டியை தொடங்கி வைக்க கேரளா வரும் போது சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவார். எனினும் இது தொடர்பாக அதிகாரபூ ர்வ தகவல் எதுவும் வரவில்லை. சபரிமலையில் அடிப்படை வசதிகள் செய்வதற்காக மேலும் 500 ஏக்கர் நிலம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு ÷ காரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்து நிலம் தந்தால் அதற்கு பதிலாக தேவசம்போர்டு வசம் உள்ள ஏதாவது  நிலத்தை காடு போல் மாற்றி ஒப்படைக்க தயாராக உள்ளோம். சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக அறிவித்தால் சர்வதேச அளவில்  கவனத்தை ஈர்க்க முடியும். பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ரோப்வே’ அமைப்பது இன்னும் ஒரு ஆண்டு காலத்துக்குள் நடைபெறும் என  நம்புகிறோம். எங்கெல்லாம் இடவசதி உள்ளதோ அங்கெல்லாம் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !