உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடிப்பிச்சை வழிபாடு!

மடிப்பிச்சை வழிபாடு!

சேலம் சங்ககிரி அருகே  உள்ள அரிசிகெட்டிப்பட்டி கிராமத்தில் 32 அடி உயர துர்க்கை சுடலைக் காளியம்மன் சிலை உள்ளது. சரபுங்கா ஆற்றங்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த அன்னைக்குக் காவல் தெய்வங்களாக சடாமுனி, சங்கிலிக் கருப்பன், மாயாண்டி ஆகியோர் உள்ளனர். இங்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மடிப்பிச்சை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு திருமணம், குழந்தைப்பேறு கைகூடுவதுடன் நோய்களும் குணமாவதாக நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !