உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திகிரி முருகன் கோவிலில் கார்த்திகை தீப வழிபாடு!

சித்திகிரி முருகன் கோவிலில் கார்த்திகை தீப வழிபாடு!

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சந்தன காப்பு சிறப்பு அலங்கராத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கன்னலம் செல்வ முருகன் கோவில் மற்றும் வளத்தி முருகன் கோவிலிலும் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !