உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில் பொங்கல் விழா

அம்மன் கோவில் பொங்கல் விழா

ஈரோடு: பெருந்துறை தாலுகா, ஈங்கூரில் உள்ள தம்பிராட்டி அம்மன் கோவில் பொங்கல் விழா, 25ம் தேதி நடக்கிறது.கடந்த, 7ம் தேதி கிராம சாந்தியும், 9ம் தேதி பூச்சாட்டுதலும் நடந்தது. 16ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடக்கிறது. 23ம் தேதி குதிரை துலுக்கு கேட்டல், அம்மை அழைத்தலும், 24ம் தேதி தீர்த்த ஊர்வலம், ஊர் அபிஷேகம் நடக்கிறது. வரும், 25ம் தேதி மாவிளக்கு, பொங்கல் விழா, அன்னதானமும், 26ம் தேதி மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !